Mullai Periyar Dam: முல்லை பெரியாறு அணைக்கு பாரமரிப்பு பொருட்களை கொண்டு செல்ல அனுமதி மறுத்த நிலையில் தேனி, இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டின் வறட்சிக்கு இலக்காகும் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களின் குடிநீர், நீர்பாசனம் போன்ற வாழ்வாதார தேவைகளை நிறைவு செய்ய முல்லைப் பெரியாறு அணை மிகவும் இன்றியமையாததாகும். எனவே, முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் கிடைக்கப் பெறவேண்டும் என்பது அம்மாவட்டங்களின் விவசாயிகளுக்கு மிகவும் உணர்வு பூர்வமானதாக உள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை முல்லை பெரியாறு அணைக்கு பராமரிப்பு பணிகள் மற்றும் தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம்,குடியிருப்பு, விருந்தினர் மாளிகை ஆகிய கட்டிடங்களில் பராமரிப்பு பணிகளுக்காக தளவாட பொருட்களை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் குமளி வழியாக தேக்கடி கொண்டு சென்றனர்.ஆனால் அப்போது, கேரள வனத்துறையினர் தளவாட பொருட்களை கொண்டு செல்ல அனுமதி தரவில்லை. மேலும் பெரியாறு புலிகள் காப்பக இயக்குனரிடம் அனுமதி பெற்று வருமாறும் தெரிவித்தனர். இதனால் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இந்த தகவல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழக விவசாயிகளிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: TN Corona: கொரோனா இன்னும் குறையல..மக்கள் அலர்டா இருங்க.. அமைச்சர் மா.சு விளக்கம்
தமிழக அதிகாரிகளை அனுமதிக்காத கேரள அரசின் செயலை கண்டித்து லோயர் கேம்பில் தமிழக விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகளை தடுத்து நிறுத்திய காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் பாரதிய கிசான் சங்கம் மாவட்ட தலைவர் சதீஷ் பாபு, 5 மாவட்ட விவசாய சங்க நிர்வாகி உள்ளிட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் தமிழக அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டது தொடர்பாக தேனி, இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அனுமதி கடிதம் இல்லை எனக்கூறி தேக்கடி பெரியோர் புலிகள் காப்பக நுழைவாயிலில் தமிழக அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கேரள வனத்துறையின் செயல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முன்னதாக சமீபத்தில் கேரள அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கடிதம் எழுதியிருந்தார். அதில், உச்சநீதிமன்ற ஆணையின்படி முல்லைப் பெரியாறு அணையின் எஞ்சிய பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: TN Corona: கொரோனா இன்னும் குறையல..மக்கள் அலர்டா இருங்க.. அமைச்சர் மா.சு விளக்கம்
மேலும் மத்திய நீர்வள குழுமத்தால் பரிந்துரைக்கப்பட்டவாறு முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கத்தினை அளவிடும் கருவிகளை அமைக்க வேண்டும் என கேரள மாநில அரசு தொடர்ந்து கேட்டுவருகிறது. எனவே நிலநடுக்கத்தினை அளவிடும் கருவிகளை பொருத்துவதற்கு தேவையான மேடை மற்றும் தூண்கள் அமைக்க பயன்படுத்தப்படவுள்ள கட்டுமான பொருட்களை அணைப் பகுதிக்கு கொண்டு செல்ல கேரள அரசின் வனத்துறை அனுமதிக்கவில்லை என தமிழக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்சனையில் தாங்கள் நேரடியாக தலையிட்டு, தேவையான கட்டுமான பொருட்களை வல்லக்கடவு வனச்சாலை வழியாக முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்கு கொண்டு செல்லவும், அவ்வனச்சாலையை சீரமைக்கவும், 15 மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவும் தேவையான ஒப்புதலை வழங்கிட தொடர்புடைய தங்கள் மாநில அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளுவதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
