சிலப்பதிகாரம் பற்றி பெரியார் சொன்னதென்ன? முதலில் அதை படியுங்கள் சகோதரி - மேடையில் சீரிய அண்ணாமலை!
மதிய ஆளும் பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் செய்த சாதனையை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பரப்பும் நோக்கத்தோடு தனது பாத யாத்திரை துங்கி நடத்தி வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி அவர்கள் பிரதமர் மோடி அவர்கள் சிலப்பதிகாரத்தை படித்து அதன் மூலம் கண்ணகியின் கோபத்தால் எப்படி பாண்டிய மன்னனின் செங்கோல் வளைந்தது என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது "என் மண் என் மக்கள்" யாத்திரையின் போது பேசிய தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை அவர்கள் பின்வருமாறு கூறினார். "சகோதரி கனிமொழி கருணாநிதி அவர்கள் முதலில் பெரியாரைப் பற்றி படிக்க வேண்டும் என்றும், பெரியார் சிலப்பதிகாரத்தை குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறினார்.
மாணவர்களுக்கு இந்த வகுப்பு எடுங்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு அட்வைஸ் கொடுத்த எடப்பாடி பழனிசாமி
"கடந்த 1951ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி சேலத்தில் நடந்த ஒரு மாநாட்டில் பேசிய தந்தை பெரியார், கணவன் கோவலன் இறந்த நிலையில் கோவம் கொண்ட கண்ணகி ஒரு பக்கத்துக் கொண்டையை எடுத்து மதுரை மீது எறிகிறாளாம், அது உடனே தீப்பிழம்பாக மாறி மதுரையையே சுட்டு எரிக்கிறதாம், இதை நம்ப முடிகிறதா? பாண்டிய மன்னன் செய்த தவறுக்கு மதுரை மக்கள் என்ன செய்வார்கள், இதுதான் கற்புக்கரசிக்கு இலக்கணமா?" என்று பெரியார் கூறியதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் அண்ணாமலை.
ஆகவே பிரதமர் மோடி அவர்களை சிலப்பதிகாரம் படிக்க சொல்ல வேண்டாம் என்றும் பெரியார் சிலப்பதிகாரத்தை பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்று முதலில் நீங்கள் படியுங்கள் என்றும் அவர் காட்டமாக பேசியுள்ளார்.
ஊழலுக்கு பிறந்தவர்கள் நீங்கள், ஜெயில் சென்று திரும்பியவர்கள் நீங்கள், 2g மோசடியில் சிக்கியவர்கள் நீங்கள், நீங்கள் எல்லாம் மோடி ஐயாவின் காலில் உள்ள நகத்தில் உள்ள தூசுக்கு கூட ஈடாக மாட்டீர்கள் என்று கடுமையாக சாடினார். ஏதோ கருணாநிதி என்ற பெயர் இருப்பதனால் மக்கள் போட்ட பிச்சையில் எம்பி ஆனவர்கள் எல்லாம் பாரத பிரதமர் மோடி அவர்களை குறித்து பேசக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.