உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தில் இரு குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை நரசிங்கத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (24). இவர் சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஞானவேலு என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை ஞானவேலு திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பாக விஜயலட்சுமி தட்டிக்கேட்டபோது அவரை வீட்டில் இருந்து அனுப்பி விட்டாராம்.

இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் விஜயலட்சுமி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

மதுரை நரசிங்கத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு விஜயலட்சுமி குழந்தைகளுடன் வந்து தங்கினார்.

இந்த நிலையில், கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வளாகத்திற்கு திங்கள்கிழமை சென்ற விஜயலட்சுமி தன்மீதும், இரு குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முய₹இ செய்தார்.

நீதிமன்ற வாயிலில் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலாளர்கள் விஜயலட்சுமியை தடுத்து நிறுத்தி குழந்தைகளை மீட்டனர். இதுகுறித்து கோ.புதூர் காவலாளார்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.