குடி குடியை கெடுக்கும் என்ற வசனத்தை கேள்வி படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இது வசனமாக தான் சிலருக்கு தெரியும். ஆனால் இதன் பொருள், ஒரு குடும்பத்தலைவன் மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்தால் எந்த அளவிற்கு ஒரு குடும்பத்தை சீர்குலைத்து நடு தெருவில்  கொண்டு வந்து நிற்கும் என்பதை உணர்த்தும் பொருள் தான் குடி குடியை கெடுக்கும் என்ற வசனம் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் போராட்டம் என்றாலே அது மதுக்கடையை அகற்ற வேண்டும் என்பதற்காகவும், பூரண மது விலக்கு தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும் தான் இருக்கும். 

இந்நிலையில், தமிழகம்  முழுவதும்  ஆங்காங்கு மதுபானக்கடையை  அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து  ஆண்கள் பெண்கள் என தங்கள் குழந்தைகளுடன் தெருவில் அமர்ந்து போராடுவதை பார்க்க முடிகிறது.

மதுபானக்கடைக்கு எதிராக இவ்வளவு எதிர்ப்பு இருக்கின்றது என்றால், அந்த அளவிற்கு அந்த குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது என்று தான் அர்த்தம்.

இவ்வாறு குடிப்பழக்கத்திற்கு அடிமையான தன் கணவனால், தன்னுடைய இரண்டு குழந்தைகளை  வளர்க்க தினம் தினம் செத்து பிழைக்கிறேன் என ஒரு தாய் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன், தாசில்தாரின் காலில் விழுந்து  கதறிய காட்சி அனைவரையும்  மனம் புண்பட வைத்துள்ளது.

இந்த சம்பவம் சேலம் மேச்சேரியில் புதியாதாக  மதுக்கடையை  திறக்க முற்பட்டபோது, அங்கு வந்த  தாசில்தாரின் காலை பிடித்து, ஒரு தாய் கதறியது என்பது குறிப்பிடத்தக்கது.