திருவள்ளூர்
 
திருவள்ளூரில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாயார் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

சென்னை போரூரை அடுத்த கொளப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (58). இவருடைய மகன் சரவணன். நேற்று காலை தாய் - மகன் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து திருவள்ளூர் மாவட்டம், போரூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.

சரவணன் மோட்டார் சைக்கிளை ஓட்ட அவருக்கு பின்னால் தமிழ்ச்செல்வி உட்கார்ந்திருந்தார். குன்றத்தூர் - போரூர் சாலையில் போரூர் அருகே இவர்கள் வந்தபோது மோட்டார்சைக்கிள் திடீரென நிலைதடுமாறியது,. இதில், தாய் - மகன் இருவரும் கீழே விழுந்தனர்.

இதில் சரவணனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆனால், அவரது தாயார் தமிழ்ச்செல்விக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் தமிழ்ச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலாளர்கல் வழக்குப்பதிந்து, பலியான தமிழ்ச்செல்வியின் உடலை உடற்கூராய்வுக்ககா அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிந்த காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.