More than 100 people are affected by the mysterious fever in Kanchipuram People without medical help
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மருத்துவ உதவி கிடைக்காததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சவகர்நகர் மற்றும் எழில்முகநகர் பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இங்கு வசிக்கும் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால்கூட, அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரவி வருக்கிறது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த 100–க்கும் மேற்பட்டவர்கள் தற்போது இந்த மர்ம காய்ச்சலால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் 15–வது மண்டலத்தில் உள்ள சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் யாரும் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு வந்து நடவடிக்கை எடுக்காததால் அந்தப் பகுதி மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர்.
இந்தப் பகுதியில் உடனே மருத்துவ முகாம் அமைத்து மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
