திருவாரூர்

திருவாரூரில் உணவு சாப்பிட்டு வரும் நேரத்தில் பைக்கில் வைத்திருந்த ரூ. 1.70 இலட்சம் மற்றும் 20 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். 

thiruvarur name board க்கான பட முடிவு

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தெற்குசெட்டித் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). இவர் நேற்று முன்தினம் இரயில்நிலைய சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில்  இருந்து ரூ. 1.70 இலட்சம்  ரொக்கம் மற்றும் 20 சவரன் நகையை எடுத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளின் பெட்டியில் வைத்துள்ளார். 

theft க்கான பட முடிவு

அதன்பின்னர், நீதிமன்ற சாலையிலுள்ள உணவகத்திற்கு சென்று உணவு சாப்பிட்டு விட்டு திரும்பிவந்தார் ராஜேந்திரன். அப்போது பெட்டியை திறந்து பார்த்த ராஜேந்திரனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெட்டியில் இருந்த பணம் மற்றும் நகையை காணவில்லை. 

complaint க்கான பட முடிவு

கண்கள் கலங்கி நின்ற ராஜேந்திரன் பணம் மற்றும் நகை திருடு போனதை நினைத்து வருத்தம் அடைந்தார். பின்னர், இதுகுறித்து திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் காவலாளார்கள் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

tamil nadu police vehicle க்கான பட முடிவு

உணவு சாப்பிட்டுவரும் நேரத்தில் மோட்டார் சைக்கிளின் பெட்டியில் இருந்த  பணத்தை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.