MODI: பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக தமிழகம் வரும் மோடி?ஸ்டாலினோடு மேடை ஏற திட்டம்.! எதற்காக தெரியுமா.?

3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் மோடி வருகிற 20ஆம் தேதி தமிழகம் வருகிறார். சென்னை- நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைக்கவுள்ளார்.

Modi will visit Tamil Nadu for the first time after taking office as Prime Minister kak

3வது முறையாக ஆட்சி அமைத்த பாஜக

நாடாளுமன்ற தேர்தல் இரண்டு மாதங்கள் நாடு முழுவதும் நடைபெற்று முடிவடைந்தது. இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பாஜக இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான இலக்கை எட்ட முடியாமல்  240 தொகுதிகளை மட்டுமே பெற்றது. அதே நேரத்தில் கூட்டணி கட்சிகளின் உதவியோடு பாஜக 3வது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைத்துள்ளது.

பாஜக அதிகமாக நம்பியிருந்த உத்தரபிரதேஷம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை கைவிட்ட நிலையில், ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட தென் மாநிலங்கள் அதிக இடங்களை பிடிக்க உதவியாக இருந்தது. கேரளாவில் கூட ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக தமிழகத்தில் வெற்றி பெற முடியாமல் திணறியது. 40க்கு 40 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.

Modi will visit Tamil Nadu for the first time after taking office as Prime Minister kak

இந்தநிலையில் 3வது முறையாக பிரதமரமாக பதவியேற்றுள்ள மோடி வருகிற 19ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் வரும் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு கொடுக்க தயாராகி வருகின்றனர். சென்னை- நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு ரயில்வே சார்ந்த திட்டங்களையும், மத்திய அரசின் திட்டங்களையும் மோடி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தொடங்கிவைக்கவுள்ளார்.

மோடியின் தமிழகம் வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல்துறையின் ஆலோசனை தொடங்கியுள்ளது. மேலும் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் பிரதமரோடு பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios