திருவிடந்தையில்,ராணுவ தளவாட கண்காட்சி விழாவில் பிரதமர் மோடி,ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிசாமி  பங்கேற்று  உள்ளனர்

ராணுவ தளவாட கண்காட்சியை அதிகாரப்பூர்வமாகஇன்று காலை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார் பிரதமர் பிரதமர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய ராணுவ கண்காட்சியில்  காலை வணக்கம் என்று தமிழில் பேசி ராணுவ கண்காட்சியில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.  அவருடைய  இந்த பேச்சு அனைவரையும்  கவர்ந்து இழுக்கும்  வகையில் அமைந்து இருந்தது.

மோடியில் உரையில் பல முக்கின் கருத்துக்கள் இடம் பெற்றன. அதில் சில ....

தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி ராணுவம் நன்கு அறிந்திருக்கிறது

உலகிற்கு அஹிம்சையை போதித்த நாடு நமது நாடாகும்

500க்கும் மேற்பட்ட உள்நாட்டு நிறுவனங்கள் 125 வெளிநாட்டு நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன

சோழர்கள் ஆண்ட பகுதியில் நீங்கள் இந்த அளவுக்கு கூடியிருப்பதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்

ராணுவ தளவாட உற்பத்திக்கு அனைத்து உதவிகளும் வழங்கப் படும்

அப்துல் கலாம்  பிறந்த மண்ணில் நான் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.. அவர்  சொன்ன அந்த கனவை என்று நினைவில் வைத்து. முன்னேற வேண்டும்.

விரைவில் வளர்ச்சி  என்னும் வெற்றியை  நாம் அடைய அப்துல் கலாமின் கனவை நிறைவேற்ற வேண்டும் என  பிரதமர் மோடி பேசினார்.