மாண்புமிக்க சகோதர சகோதரிகளே வணக்கம..! தமிழில் உரையாற்றும் மோடி....

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்  70 ஆவது பிறந்த நாளான இன்று, மகளிருக்கான  மானிய விலையில்  இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க சென்னை வந்திருக்கும் பிரதமர் மோடி,கலைவாணர் அரங்கிற்கு சென்று விழா மேடையில்,மகளிருக்கான இருசக்கர வாகனத்தை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்....

பின்னர் சிறப்புரை ஆற்றிய பிரதமர் மோடி அவர்கள்,தமிழில் உரையை தொடங்கினார் .. அப்போது  அவர் உரை தொடங்கிய முதல் வார்த்தை ...

"மாண்புமிக்க சகோதர சகோதரிகளே வணக்கம..!

மகாகவி சுப்ரமணிய பாரதி வாழ்ந்த மண்ணிலே நிற்பதற்கு பெருமை அடைகிறேன்... என தமிழில் கூறிக்கொண்டு, பின்னர் விழா மேடையில் அமர்ந்து இருக்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,முதல்வர் எடப்பாடி  பழனிசாமி,துணை முதல்வர் பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், தனபால் என அனைவரையும் பெயர் மறக்காமல் மேடையில் சொல்லி  அவர்களையும்  கவுரவித்தார் பிரதமர்....பின்னர் இருசக்கர வாகன திட்டத்தை பற்றியும்,பிரசவ கால விடுமுறை பற்றியும்  எடுத்துரைத்தார்....

 குஜராத் மற்றும் போபாலில் பயபடுதப் பட்ட  எல்இடி பல்ப்  பற்றியும் பேசினார்....

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி அவர்கள் வணக்கம் சொல்லி தன்னுடைய  உரையை முடித்துக்கொண்டு,விழா மேடையிலிருந்து  புறபட்டு நேராக கவர்னர் மாளிகைக்கு சென்றார் பிரதமர்..