பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை... பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாள் முடிவுகள் வெளியீடு
மேலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், 12 ஆம் வகுப்பு பொத்த்தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது, விடைத்தாள் திருத்தும்போது செல்ஃபோன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காலதாமதமாக வருவது, பணியின் இடையே அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்கவும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு விழாவில் தண்ணீர் கூட வழங்காமல் அழைக்களிக்கப்பு; மாற்று திறனாளிகள் வேதனை