MK Subramaniam who was a government fighter resigned from his post.

அரசு ப்ளீடராக இருந்த எம்.கே.சுப்ரமணியனும் தமது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ராஜ கோபாலன் அந்த பதவியை நிரப்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ராஜரத்தினம் தனது பதவியை இன்று காலை ராஜினாமா செய்தார். இதுகுறித்து தமிழக அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக குறிப்பிடிருந்தார். 

இதையடுத்து தமிழக அரசின் புதிய தலைமை குற்றவியல் வழக்கறிஞராக எமிலியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

அவரை தொடர்ந்து அரசு ப்ளீடராக உள்ள எம்.கே.சுப்ரமணியனும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் சிலரும் ஓரிரு நாளில் பதவி விலகுவார்கள் எனவும் செய்திகள் வெளியானது. 

மேலும், புதிய வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளதால் அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் இவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியது. 

இந்நிலையில்,அரசு ப்ளீடராக இருந்த எம்.கே.சுப்ரமணியனும் தமது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ராஜ கோபாலன் அந்த பதவியை நிரப்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.