Asianet News TamilAsianet News Tamil

இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

MK Stalin announced mani mandapam for immanuel sekaran smp
Author
First Published Sep 11, 2023, 10:31 AM IST

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, தமிழக அரசின் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், இம்மானுவேல் சேகரனாரின் மகள் சூரிய சுந்தரி பிரபா ராணி மற்றும் அவரது பேரன் சக்கரவர்த்தி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இக்கோரிக்கையினை வலியுறுத்தினர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் அரசுக்கு பணம் மிச்சமாகும்; ராமதாஸ் பேட்டி

இந்நிலையில்  பொதுமக்களின் நீண்ட நாள்  கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் சமூக பங்களிப்பினைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டினையொட்டி அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தியாகி இம்மானுவேல் சேகரனார் 1924ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி பிறந்தார். அவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமம் ஆகும். இவர் 1942ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றவர். மேலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடியவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios