மிஸ் இந்தியாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய முதல்வர்..!

மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட அனுக்ருதி தமிழக முதல்வர் எட்பாடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சமீபத்தில் நடைப்பெற்ற மிஸ் இந்தியா போட்டியில் கலந்துக்கொண்டு மிஸ் இந்தியாவா தேர்வு செய்யப்பட்டவர் திருச்சியை சேர்ந்த அனுக்ருதி.

இவர் இன்று காலை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி முதலமைச்சரை சந்ந்தித்து வாழ்த்து பெற்றார்.

அனுக்ருதிக்கு உலக அழகி பட்டம் வென்ற மனுஷி ஷில்லர் மகுடம் சூட்டினார்.

19 வயதே ஆன அனுக்ருதி, மாடலிங் மற்றும் சினி துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். இவருடைய விடா முயற்சியால் இன்று மிஸ்  இந்தியாவாக தேர்வாகி உள்ளார்.

இந்நிலையில், இன்று காலை தமிழக முதல்வரை சந்தித்த அனுக்ருதி  அவரிடம் வாழ்த்து பெற்றார்.

முதல்வரும் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.  தற்போது  மிஸ் இந்தியாவாக தேர்வான அனுக்ருதி மிஸ் வேர்ல்ட் ஆக,  அதற்கான முயற்சி மற்றும் பயிற்சி எடுத்து வருகிறார்