minister vijaya baskar kombaan kaalai death

புதுக்கோட்டை தென்னலூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான, கொம்பன் காளை வாடிவாசல் கட்டையில் மோதி உயிரிழந்தது.

எந்த ஒரு ஜல்லிகட்டிலும் யார் பிடியிலும் சிக்காத கட்டுக்கடங்காத தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் என்ற காளை களத்தில் வீர மரணம் அடைந்ததால் அப்பகுதியே சோகமாக மாறியது.

புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூர் என்ற தென்னலூரில் நடந்த ஜல்லிகட்டில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் என்ற காளை வாடி வாசலை விட்டு வெளியே வரும் போது சுவற்றில் மோதி களத்திலேயே வீரமரணம் அடைந்தது. பின்னர் அந்த காளையை டாடா ஏசில் கொண்டு சென்றனர். பின்னர் அந்த வீர மரணம் அடைந்த கொம்பன் காளையை இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் தோட்டத்தில் அமைச்சர் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி இறுதி சடங்கு செய்தனர்.

கொம்பன் காளை அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு ஜல்லிகட்டிலும் எந்த ஒரு வீரருக்கும் கட்டுக்கடங்காத காளை என்பது குறிப்பிடத்தக்கது. கொம்பன் காளை வீர மரணமடைந்தது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜல்லிக்கட்டில் காளைகள் மோதி, வீரர்கள் வீர மரணம் அடைவது அவ்வப்போது நடைபெறும், ஆனால் தற்போது ஜல்லிக்கட்டு காளையே வீர மரணம் அடைந்திருப்பது அனைவரையும் சோகத்தில மூழ்க வைத்துள்ளது

மேலும்,சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கருக்கு சொந்தமான இந்த காளை இறந்ததால், இந்த தகவல் மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.