4 வழிச்சாலைகளில் சுங்கச்சாவடிகளுக்கு அனுமதி கிடையாது; அமைச்சர் வேலுவின் தகவலால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் 4 வழிச்சாலைகளாக மாற்றப்படும் மாநிலச் சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படாது என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

Minister Velu has said that toll booths will not be set up on state highways that will be widened to 4 lanes vel

தமிழக சட்டசபையின் 3வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், பல்வேறு பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகள் 7 அடி அகலத்தில் இருந்து 10 அடியாக அகலப்படுத்தப்பட்டு அதில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.

ஆனால், மாநில நெடுஞ்சாலைகளை 4 வழிச்சாலைகளாக தரம் உயர்த்தி போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும் என்றும், இதற்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மாநிலச் சாலைகள் 4 வழிச்சாலைகளாக அகலப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு; காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அவ்வாறு 4 வழிச்சாலைகளாக அகலப்படுத்தப்படும் மாநிலச் சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவது கிடையாது என்று தெரிவித்துள்ளார். 4 வழிச்சாலைகளாக அகலப்படுத்தப்படும் மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படாது என்ற அமைச்சரின் அறிவிப்பால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios