எங்கேயோ 'கிண்டி'த் தருவதை ஆளுநரும், எடப்பாடியும் மென்று கொண்டிருக்கிறார்கள்- விளாசும் டிஆர்பி ராஜா

டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் தமிழகத்தின் பங்கேற்பு குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விளக்கம் அளித்துள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்கான அரங்கம் அல்ல, மாறாக உலகளாவிய தொழில் வளர்ச்சி குறித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் மையம் என டாவோஸ் மன்றத்தின் நோக்கத்தை அவர் தெளிவுபடுத்தினார்.

Minister T R P Raja explained what happened at the Davos World Economic Conference kak

டாவோஸ் மாநாடு -நடந்தது என்ன.?

டாவோஸ் மாநாட்டில் தமிழகத்திற்கு முதலீடு ஈர்க்கவில்லையென எடப்பாடி பழனிசாமியும், தமிழகம் பொருளாதாரத்தில் சரிந்து வருகிறது என ஆளுநர் ரவியும் விமர்சித்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா டாவோஸ் மாநாட்டில் நடந்தது என்ன என விளக்கம் அளித்துள்ளார். அதில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடந்த சர்வதேச அரங்கில் தமிழ்நாடு தனி முத்திரையைப் பதித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் எவரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.  

இதையும் படியுங்கள்

டாவோஸ் உலக மாநாடு.! தமிழ்நாடு ஈர்த்த முதலீடு என்ன.? கேள்வி கேட்கும் எடப்பாடி

Minister T R P Raja explained what happened at the Davos World Economic Conference kak

ஒப்பந்தங்களைப் போடுவதற்கான அரங்கமல்ல

டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் என்பது முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போடுவதற்கான அரங்கமல்ல. இதை அண்டை மாநிலமான ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் அவர்களும் தெளிவாக-விரிவாக, பொருளாதார அறிவாற்றல் உள்ள அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தெரிவித்திருக்கிறார். உலகளாவிய தொழில் வளர்ச்சி எந்தத் திசையில் பயணிக்கிறது, அதற்ககேற்ப உலகில் உள்ள நாடுகள் தமது தொழிற்கொள்கைகளை எப்படி வகுத்துள்ளன, அடுத்தடுத்த ஆண்டுகளில் எந்தெந்த துறையில் முதலீடுகள் பெருகும் உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ளவும், பரிமாறக்கொள்ளவுமான உலக நாடுகளின் சந்திப்பு மையம்தான் டாவோஸ் உலகப் பொருளாதார மன்றம்.

தமிழ்நாடு அரசின் சார்பில் அதில் பங்கேற்று, உலக நாடுகளில் எவற்றுடன் தொழிற்கட்டமைப்பை மேம்படுத்தலாம் என்பதற்கான சந்திப்புகள், புதிய நிறுவனங்களுடனான கலந்துரையாடல்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டிருப்பது தொடர்பான விளக்கங்கள் ஆகியவற்றை முன்னெடுக்கும் அருமையான வாய்ப்பு அமைந்தது. தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட முறையில் பல தொழிற்சாலைகள் உருவாகி, வேலைவாய்ப்பை வழங்கி, உற்பத்தியைத் தொடங்கியிருப்பது குறித்த விவரங்களை டாவோஸில் சந்தித்த உலக நாடுகளின் நிறுவனங்களிடம் விளக்கி, அவர்களைத் தமிழ்நாட்டில் தொழில்தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 50க்கும் மேற்பட்ட சந்திப்புகள் நடந்துள்ளன.

Minister T R P Raja explained what happened at the Davos World Economic Conference kak

தொழில் துறை ஆலோசனை

சிங்கப்பூர் நாட்டின் துணை பிரதமர் கான் கிம் யோங் அவர்களுடனான சந்திப்பபு,  ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் டோக் அல் மார்ரி அவர்களுடனான சந்திப்பு,  சவுதி அரேபியாவின் தொழில் மற்றும் கனிம வளத்துறை மூத்த அமைச்சர் பந்தர் அல்ஹோர்யெஃப் அவர்களுடனான சந்திப்பு,  ஃபின்லாந்து நாட்டின் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் கூட்டுறவு வளர்ச்சித் துறை அமைச்சர் வில்லி டாவியோ சந்திப்புகள் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். மேலும்  தொழில் சூழலியல் கட்டமைப்பு கொண்ட தமிழ்நாட்டில் தனது உற்பத்தி அடித்தளத்தை விரிவுபடுத்தும் வகையில் மின்னணு துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனம் சாதகமான பதிலை அளித்துள்ளது. 

டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் இந்தியா பெவிலியனைத் வைக்கும் நிகழ்விலும் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மராட்டிய மாநில முதலமைச்சர் மற்றும் சில மாநிலங்களின் அமைச்சர்களுடன் இணைந்து அந்த நிகழ்வில் பங்கேற்று, தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் உருவாகியுள்ள தொழில்வளர்ச்சியையும், தொழிற்கட்டமைப்புகளையும், புதிய முதலீடுகளுக்கான சூழலையும் விளக்கி, ஏற்கனவே தொழில்துறையில் வளர்ந்துள்ள மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு ஆற்றி வரும் முக்கியப் பங்கினைக் குறிப்பிட்டேன்.

இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்கள் என்பது உலக அரங்கில் வியப்புடன் கவனிக்கப்படுகிறது. பல மாநிலங்கள் உள்ள ஒரு நாட்டில் ஒரேயொரு மாநிலம் எப்படி இந்தளவிற்கானப் பங்களிப்பை செய்ய முடிகிறது என்பது குறித்து மற்ற நாடுகளும் அறிந்துகொள்ளும் வகையில் டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தின் Women In Tech Hub அமர்வில் தமிழ்நாடு மட்டுமே பங்கேற்கும் வாய்ப்பு அமைந்தது. 

டாவோஸ் மாநாடு.! பல லட்சம் கோடி முதலீட்டை அள்ளும் மாநிலங்கள்- தமிழகமோ-ரூ. 0 கோடி- விளாசும் அன்புமணி

Minister T R P Raja explained what happened at the Davos World Economic Conference kak

இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலம்

'டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் 2025-ம் ஆண்டுக்கான கூட்டத்தில் திமுக அரசு சாதித்தது என்ன?' என கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்.  பொருளாதாரத்தில் தமிழ்நாடு என்ன சாதித்தது? என்பதை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் (Econmic advisary council report to pm report EAC-PM) அறிக்கையை கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்! இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருப்பதை அறிந்து கொள்ளாமல் அற்பதனமாக அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 1960-61ல் 8.7 சதவிகிதமாக இருந்தது. அது 2023-2024-ல் 8.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தனி நபர் வருவாயைப் பொறுத்தவரை, தேசிய சராசரியோடு ஒப்பிடுகையில் தமிழகத்தின் சராசரி 2023-2024-ல் 171.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

 தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா ஆகிய 5 மாநிலங்களும் 2023-24-ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 30 சதவிகித பங்கினை கொண்டிருக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  உலக நாடுகள் வியக்கும் வகையில் தமிழ்நாட்டின் தொழிற்கட்டமைப்பும், பெண்களின் பங்களிப்பும் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், மாநிலத்தின் மீது எவ்வித அக்கறையுமில்லாமல் வெறும் அவதூறுகளை அரைவேக்காட்டுத்தனமாக எங்கேயோ 'கிண்டி'த் தருவதை ஆளுநரும் எதிர்கட்சி தலைவரும் மென்று கொண்டிருக்கிறார்கள் என டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios