minister sengottayan asking help from industries and ex students
பள்ளிக்கல்வித்துறைக்கு தொழில் நிறுவனங்கள் உதவ வேண்டும் எனவும், முன்னாள் மாணவர்களும் ஏதாவது செய்ய வேண்டும் எனவும் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அரசில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். கல்வித்துறைக்கான நிதி போதுமான அளவு ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது. பள்ளிக்கு தேவையான உபகரணங்கள், கழிப்பிட வசதிகள் செய்து தரப்படுகின்றன.
பள்ளி கல்வி துறைக்கு தொழில் நிறுவனங்கள் உதவ வேண்டும். முன்னாள் மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும்.
முன்னாள் மாணவர்களுக்கு உதவ குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறைக்கு 26,913 கோடி ரூபாய் ஒதுக்கபட்டுள்ளது.
இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழக பள்ளிக்கல்வி துறை திகழும். 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை கல்வித்துறைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாடநூல்கள் மாற்றம் தொடர்பாக அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. 2 நாட்களில் பாடநூல்கள் மாற்றம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும்.
பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைவரின் கருத்துகளையும் கேட்டே முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
3 ஆண்டு காலத்தில் பாடத்திட்டங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கபடுகிறது. நீட் தேர்வை பொறுத்த வரை தமிழக அரசு உறுதியாக உள்ளது.
தமிழகம் தனது கருத்துக்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. விளையாட்டு துறையில் மாற்றத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களை நல்வழிப் படுத்துவதில் அரசு கவனம் செலுத்தபடுகிறது. விளையாட்டு, யோகா போன்றவற்றில் சிறந்தவர்களாக மாணவர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
+2 தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் நகல் பெற நாளை மாலை 5 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இனி 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும்.
மாணவர்களை நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து வகைகளிலும் பள்ளிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
