மருத்துவ கலந்தாய்வு இன்னும் தொடங்காததால் ஜூலை 2ஆம் தேதி தொடங்குவதாக இருந்த பொறியியல் படிப்பு கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

பொறியியல் படிப்பு- தரவரிசை பட்டியல் வெளியீடு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450 க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 54,000 இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ள. இந்த இடங்களில் 2023-24 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்காண விண்ணப்ப பதிவு மே 5 ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த இருபதாம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிடப்பட்டுள்ளன.

பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில், திருச்செந்தூரை சேர்ந்த நேத்ரா முதல் இடத்திலும், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஹரிணிக்கா இரண்டாம் இடத்திலும், மூன்றாம் இடத்தில் ரோஷினி பானு இடம்பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்களுக்கான தரவரிசை பட்டியலை www.TNEA online.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

தரவரிசை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்படுவதாக கூறிய அவர், இதை தொடர்ந்து ஜூலை இரண்டாம் தேதி கலந்து வாய்வு தொடங்க இருந்த நிலையில் மருத்துவ கலந்தாய்வு தேதி இன்னும் அறிவிக்கப்படாத காரணத்தால் பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறினார். 

இதையும் படியுங்கள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு விரைவில் புதிய தலைவர்? ரேஸில் யார்?