- Home
- Tamil Nadu News
- தமிழக பட்ஜெட் 2026-27: அண்ணா பிறந்தநாளில் மாமா தரும் தங்க மோதிரம்! துள்ளி குதிக்கும் இளஞ்ஜோடிகள் - யார் யாருக்கு கிடைக்கும்?
தமிழக பட்ஜெட் 2026-27: அண்ணா பிறந்தநாளில் மாமா தரும் தங்க மோதிரம்! துள்ளி குதிக்கும் இளஞ்ஜோடிகள் - யார் யாருக்கு கிடைக்கும்?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் 2026-27 பட்ஜெட்டில், "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" அறிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கு எப்போது கிடைக்கும் தெரியுமா?

செம்மையான அறிவிப்பு.! சாதித்த விஜய்.!
தமிழக சட்டமன்றத்தின் 2026–27 ஆம் ஆண்டுக்கான முதல் முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் சமூக நலன், கல்வி, வேளாண்மை, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றில் அதிக கவனம் ஈர்த்த திட்டமாக "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" இடம்பெற்றுள்ளது.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் சீர் திட்டம்
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, புதிய "தாய்மாமன் சீர் திட்டம்" தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் வழங்கும் அன்பு மற்றும் பாரம்பரிய சீர் மரபை அரசே ஊக்குவிக்கும் வகையில், தங்க மோதிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் அறிவித்தார். சமூக நலன் மற்றும் குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழர் பாரம்பரியத்தில் தாய்மாமனின் சீர் வரிசைக்கு சிறப்புமிக்க இடம் உண்டு. அதனைப் பிரதிபலிக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராமில் தங்க மோதிரம் வழங்கும் "தாய்மாமன் தங்க மோதிரம்" திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்படும் என நிதியமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் குழந்தையைப் பெற்றுெடுக்கும் இளம் தம்பதியினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நிதி ஒதுக்கீடு மற்றும் தகுதிகள்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்காக இப்அறிவிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
யார் யாருக்குக் கிடைக்கும்?: தமிழ்நாட்டைச் சேர்ந்த நிரந்தரக் குடிமக்களாக இருந்து, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கப்படும்.
பயனாளித் தகுதி: ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் இத்திட்டத்தின் பயனாலிகளாகக் கருதப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் நோக்கம்
அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவைகளை மேலும் ஊக்கப்படுத்தவும், தாய்மையின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையிலும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசு ஒவ்வொரு குழந்தையின் பிறப்பிலும் தாய்மாமனின் அன்பைப் பிரதிபலிக்கும் வகையில் பொறுப்பேற்று இந்த சீர்வரிசையை வழங்கவுள்ளது.
புதிய அரசின் முதல் பட்ஜெட்டிலேயே இத்தகைய அறிவிப்பு வெளியாகி உள்ளதால், தாய்மார்களும் இளஞ்ஜோடிகளும் இத்திட்டத்தை உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர்.
சந்தோஷமாக துள்ளிக்குதித்த இல்லத்தரசிகள்.!
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே இளம் தம்பதிகள் மற்றும் குழந்தையை எதிர்பார்த்து இருக்கும் குடும்பங்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக முதல் குழந்தையை வரவேற்கத் தயாராக இருக்கும் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் தகுதி, நடைமுறை, பயனாளிகள் யார் என்பதைக் குறித்து ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
எனினும், திட்டத்தின் கீழ் யார் யாருக்கு தங்க மோதிரம் வழங்கப்படும், குழந்தையின் வயது வரம்பு என்ன, வருமான உச்சவரம்பு இருக்குமா, அனைத்து குடும்பங்களும் பயன்பெற முடியுமா அல்லது குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமா வழங்கப்படும் என்பது போன்ற விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் அரசாணை மூலம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அறிமுகமாகும் இந்தத் திட்டம், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் தமிழர் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் புதிய சமூக நலத் திட்டமாக பார்க்கப்படுகிறது. சமூக நலன் சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளுடன் வெளியாகியுள்ள இந்த பட்ஜெட்டில், "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" முக்கியமான கவன ஈர்ப்பாக மாறியுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பான முழுமையான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை, செயல்படுத்தும் தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
