இயந்திரங்களில் பணம் செலுத்தி மஞ்சள் பை பெறும் திட்டம் நாளை தொடங்கப்படும் என்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் தயாராகி வருவதாகவும் வருகிற ஜூலை 15-ஆம் தேதிக்குள் அனைத்து ஏற்பாடுகளும் வெளியாகிவிடும் என்றும் இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
இயந்திரங்களில் பணம் செலுத்தி மஞ்சள் பை பெறும் திட்டம் நாளை தொடங்கப்படும் என்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் தயாராகி வருவதாகவும் வருகிற ஜூலை 15-ஆம் தேதிக்குள் அனைத்து ஏற்பாடுகளும் வெளியாகிவிடும் என்றும் இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை மற்றும் மதுரையைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் ஊக்கத் தொகைகளை வழங்கினார்.

பிரேசில் நாட்டில் நடைபெற்ற 24-ஆவது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி 2022-ல் 3 தங்க பதக்கங்களை வென்ற ஜெ. ஜெர்லின் அனிகா விற்கு வாழ்ந்து தெரிவித்த முதலமைச்சர் ஊக்கத்தொகையாக 75 லட்ச ரூபாயும் சென்னையைச் சேர்ந்த பிரித்வி சேகர் 2 வெண்கலம் ஒரு வெள்ளி என மூன்று பதக்கங்கள் வென்ற வீரருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர் அவருக்கு 35 லட்ச ரூபாயும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், இனி வரக்கூடிய போட்டிகளில் மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகள் பங்கேற்க தமிழக அரசு முழு உதவி அளிக்கும் எனவும் தெரிவித்தார். சுற்றுச்சூழலை பாதிப்பை தடுக்ககூடிய வகையில் இயந்திரத்தில் பணம் செலுத்தி மஞ்சள் பை வழங்கும் இயந்திரங்கள் நாளை நிறுவப்பட இருப்பதாக தெரிவித்தார்.

இத்தகைய இயந்திரங்களில் பொதுமக்கள் 10 ரூபாய் பணம் செலுத்தி மஞ்சள் பை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார் மேலும் தொழில் நிறுவனங்கள் சமூக மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தலாம் எனவும் தனிநபர்களும் இதனை செயல்படுத்தலாம் எனவும் தெரிவித்தார் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதனை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் ஜூலை 15-ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும் என்றும் தெரிவித்தார்
மேலும் படிக்க: சுற்றுலாத்துறையில் புதிய மைல்கல்.. சென்னை டூ புதுச்சேரி சொகுசு கப்பல் பயணம்.. முதலமைச்சர் இன்று துவக்கம்..
