ரயில் படிக்கட்டில் இளைஞர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்  என அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை பரங்கிமலையில் மின்சார ரயிலில் தொங்கிய படி சென்ற 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சென்னையில் தினமும் ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து வேலைக்கு செல்பவர்களில் பெரும்பாலோனோர் இந்த ரயில்களையே பெரிதும் பயணம் செய்கின்றனர். 

இந்நிலையில் சென்னை கடற்கரை-திருமால்பூர் விரைவு ரயில் இன்று காலை 8.30 மணிக்கு சென்றுக்கொண்டிருந்தது. அப்போது மாம்பலம்-கோடம்பாக்கம் இடையே உயர் மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததால் நீண்ட நேரமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன. குறைந்த அளவே ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். 

இந்நிலையில் கடற்கரையில் இருந்து திருமால்பூர் செல்லும் ரயில் இன்று காலை புறப்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக அதில் ஏராளமான பயணிகள் தொங்கிக்கொண்டு சென்றனர். 

பரங்கிமலை அருகே வந்தபோது, ரயிலில் தொங்கிக்கொண்டிருந்த பயணிகள் ரயில் நிலைய கான்கிரீட் தடுப்பில் பயங்கரமாக மோதினர். இதில் தொங்கிக் கொண்டிருந்தவர்களில் 10 பேர் அடுத்தடுத்து கீழே விழுந்தனர்.

இதில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், ரயில் படிக்கட்டில் இளைஞர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்  என அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.