Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினரை ஓட, ஓட விரட்டி செதில் செதிலாக வெட்டிக்கொன்ற கும்பல்... காசிமேட்டில் பயங்கரம்!

minister jayakumar relation killed in kasimedu
minister jayakumar relation killed in kasimedu
Author
First Published Jun 17, 2018, 4:49 PM IST


முன்விரோத தகராறில் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினரை 5 பேர் கொண்ட கும்பல் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசிமேடு, அமராஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை அவர் காசிமேடு காசிபுரம் பி பிளாக் கில் உள்ள கடைக்கு சென்று டீக்குடித்துக் கொண்டு இருந்தார். அப்போது மறைந்திருந்த 5 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சிவக்குமாரை சுற்றி வளைத்தனர்.

அதிர்ச்சி சிவகுமார் கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக் ஓட்டம் பிடித்தார். ஆனால் அவர்கள் ஓட, ஓட விரட்டி சிவக்குமாரை சரமாரியாக வெட்டினர். தலை, முதுகு, கழுத்தில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே உயிருக்கு போராடிய சிவக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இருந்தார்.

இது குறித்து காசிமேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த ஓருவருடன் ஏற் பட்ட முன்விரோதத்தில் சிவக்குமார் தீர்த்து கட்டப் பட்டிருப்பது தெரிந்தது.

மற்றொன்று, அமராஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும், சிவக்குமாருக்கும் கால்வாய் தொடர்பாக கடந்த 1 ஆண்டுக்கு மேலாக பிரச்சினை இருந்துள்ளது. இதுபற்றி சிவக்குமார் பலமுறை போலீசில் புகார் செய்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையேயான மோதல் வலுத்துள்ளது. இந்த தகராறில் கூலிப் படையை ஏவி சிவக்குமாரை  செதில் செதிலாக  வெட்டி வீழ்த்தியுள்ளனர்.  

மேலும் சிவகுமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி ஒருவருக்கும் தகராறு உள்ளது. அவரை பற்றி சிவகுமார் போலீசாருக்கு தகவல் சொல்லப்பட்டது. இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலையுண்ட சிவக் குமாருக்கு குமுதா என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். இவர் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் ஆவார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலையால் காசிமேடு பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios