Asianet News TamilAsianet News Tamil

துணை வேந்தர் நியமனத்தில் கோடிகள் புரளவில்லை - உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்...

Millions do not flow in the appointment of the Vice-Chancellor - Higher Education Minister
millions do-not-flow-in-the-appointment-of-the-vice-cha
Author
First Published Mar 15, 2017, 4:34 PM IST


சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பதவி நியமனத்துக்கு தமிழக அரசு லஞ்சம்  வாங்குவதாக எழுந்த புகாருக்கு உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டிசம்பர் 31, 2010 முதல் ஜூலை 31, 2012 வரை இருந்தவர் ராஜாராம்.

திருநெல்வேலியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி, வேலூரில் உள்ள தந்தை பெரியார் தொழில்நுட்பக் கல்லூரி, சேலம் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார்.

கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் ஓருங்கிணைக்கப்பட்டவுடன் இவர் கோவையிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

millions do-not-flow-in-the-appointment-of-the-vice-chaஇதுகுறித்து சென்னை அயனவரத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 50 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறி, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஜாராம், கல்லூரிகளில் பணம் வசூல் செய்கிறார் எனவும், தெரிவித்தார்.

இந்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் நியாயமான முறையில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, துனைவேந்தர்  நியமனம் நியாயமான முறையில் நடைபெறும் எனவும், துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசு நேரடியாக தலையிடாது எனவும் தெரிவித்தார்.

மேலும் துணைவேந்தர் நியமனத்தில் எந்த தவறும் நடைபெறாது எனவும் உறுதியளித்தார்.  

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios