ஜனவரி 17 ல் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா… மாலை அணிவிக்கிறார் சசிகலா…

எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாளையொட்டி, வரும் 17-ம் தேதியன்று, அதிமுக தலைமைக் கழகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்‍கு, கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். 

டாக்‍டர் எம்.ஜி.ஆரின் 100-வது ஆண்டு பிறந்த நாளான வரும் 17-ம் தேதி, செவ்வாய்க்‍ கிழமை காலை 10.45 மணிக்‍கு, சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக்‍ கழக வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்‍டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்‍கு, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக அக்கட்சி வெயியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது,

மேலும் அந்த நிகழ்ச்சியின்போது எம்ஜிஆரின் 100-வது ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பு மலரையும் வெளியிட உள்ளார். 

அதனைத் தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் சசிகலா, கழக அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 104 நலிந்த தொழிலாளர்களுக்‍கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவியும் வழங்க உள்ளார்.