Asianet News TamilAsianet News Tamil

8 பெண்களின் வாழ்க்கையில் கபடி ஆடிய கல்யாணமன்னன்... வசமாக சிக்கிய ப்ரோக்கர்கள்...

Metti oli marriage assembler Arrested at kovai
Metti oli marriage assembler Arrested at kovai
Author
First Published Jan 21, 2018, 11:43 AM IST


கல்யாணமன்னன் புருசோத்தமன் எட்டு பெண்களின் வாழ்க்கையில் விளையாடியதற்கு உதவிய கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த மெட்டிஒலி திருமண தகவல் மையம் நடத்திவந்த மோகனன் அவருடைய மனைவி வனஜாகுமாரி ஆகியோர் மீது மோசடிக்கு உடந்தையாக இருத்தல் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் வெள்ளலூரைச் சேர்ந்த 57 வயதான  புருஷோத்தமன். ‘இரண்டாவது திருமணம்’ என்கிற பெயரில் பல பெண்களை ஏமாற்றி, தனது காம லீலைகளை நடத்திவிட்டு அவர்களிடமே கோடிக்கணக்கில் பணத்தை அபேஸ் பண்ணிவிட்டு தலைமறைவாக வாழும் கல்யாண மன்னனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

கோவை வெள்ளலூரைச் சேர்ந்த விமலா பள்ளி ஆசிரியை... சென்னையைச் சேர்ந்த இந்திரா காந்தி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியை..., கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாந்தினி, ஈரோட்டைச் சேர்ந்த சித்ரா, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த குமுதவல்லி மற்றும் சுசீலா

என ஒரு லிஸ்ட் போடலாம்... இவர்களில் இதுவரை குமுதவல்லி, இந்திரா காந்தி, சாந்தினி மட்டுமே புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரில், காந்திபுரத்தில் உள்ள மெட்டி ஒலி திருமண தகவல் மையம் மூலமாக வெள்ளலூரை சேர்ந்த புருசோத்தமன் என்பரை சந்தித்ததாகவும், புருசோத்தமன் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருவதாகவும், தன்னுடைய மனைவி இறந்து விட்டதால் கல்லூரியில் படிக்கும் தன்னுடைய மகளை பார்க்க ஆள் இல்லை என்பதால் மறுமணம் செய்வதாகவும் கூறினார். இதனை உண்மை என நம்பிய குமுதவள்ளி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புருசோத்தமனை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களில் புருசோத்தமன் தனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி குமுத வள்ளியிடம் இருந்து ரூ. 3 கோடி வாங்கினார்.

Metti oli marriage assembler Arrested at kovai
இதன் பின் தலை மறைவாகிவிட்டதால் சந்தேகம் அடைந்ததால். புருசோத்தமன் குறித்து விசாரித்த போது அவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்தது இவ்வாறு புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது புருசோத்தமன் தொழில் அதிபர் என கூறி கோவையை சேர்ந்த சபிதா, உஷாராணி, விமலா, சுசீலா, சென்னை அண்ணா நகரை சேர்ந்த பேராசிரியை இந்திரா காந்தி, ஈரோட்டை சேர்ந்த சித்ரா மற்றும் குமுதவள்ளி உள்பட 8 பேரை தாலி கட்டி திருமணம் செய்து அவர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததும், அதற்கு கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் புருசோத்தமனின் மகள் கீதாஞ்சலியும் உடந்தையாக இருந்ததும்  தெரிகிறது.

இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த மெட்டி ஒலி திருமண தகவல் மையத்தை நடத்தி வந்த கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த மோகனன் அவருடைய மனைவி வனஜாகுமாரி ஆகியோர் மீது மோசடிக்கு உடந்தையாக இருத்தல் உள்பட 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்த நிலையில், பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் புருசோத்தமன் குறித்து முக்கிய தகவல்களை தெரிவித்து உள்ளதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. புருசோத்தமன் 8 பெண்களை மட்டும் தான் ஏமாற்றி திருமணம் செய்து பணம் பறித்தாரா? அல்லது வேறு பெண்களையும் ஏமாற்றி உள்ளாரா? என்பது தொடர்பாகவும் கைதான தம்பதியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios