புதுக்கோட்டை 

மீத்தேன் எரிவாயு திட்டத்தை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தி புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைபாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் த.செந்தில்குமார்,  ஒருங்கிணைப்பாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைப்பது, 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது, 

மீத்தேன் எரிவாயு திட்டத்தை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் அமைக்கக் கூடாது" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. 

இதில், நிர்வாகிகள் வேங்கை பழனி, பாண்டியராஜன், தியாகராஜன், கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து