செய்யூர் வட்டம், இடைக்கழிநாடு பேரூராட்சியில் சாமானிய வணிகர்கள் சமூக நலச்சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடப்பாக்கம் பேருந்து நிலையத்தின் முன் வெள்ளிக்கிழமை அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரதத்துக்கு சங்கத் தலைவர் தர்ம தினகரன் தலைமை வகித்தார். கௌரவ தலைவர் கே.செல்வமணி முன்னிலை வகித்தார்.

இதில், “இடைக்கழிநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலம்பரை கோட்டையை சுற்றி உயர்கோபுர மின்விளக்குகள், சுற்றுச்சுவர் கட்ட வேண்டும், பேரூராட்சி பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

உண்ணாவிரதத்தில் அபிபுல்லா, நடராஜன், தாஸ், குப்புமீரான், விமல்தாஸ், கோதண்டராமன் உள்பட இடைக்கழிநாடு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.