Medical shop bus bandh at 30th for Against online medicine
ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 30 ஆம் தேதி அகில இந்திய அளவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை அனுமதிக்கக் கோரி ஏராளமான கோரிக்கைகள் மத்திய அரசுக்கு வந்தது. இதையடுத்து மத்திய சுகாதாரத் துறை தற்காலி கமாக ஒரு கமிட்டியை அமைத்து ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வது குறித்து ஆய்வு நடத்தியது.
அந்த கமிட்டி தனது ஆய்வறிக்கையை மத்திய சுகாதாரத் துறையிடம் சமர்ப்பித்தது. இதையடுத்து ஆன்லைனில் மருந்து விற்பனையை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், ஆன்-லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30-ம் தேதி அகில இந்திய அளவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
