Asianet News TamilAsianet News Tamil

பெரம்பலூரில் மருத்துவ அலுவலர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்; அவங்களுக்கும் கோரிக்கை இருக்கு...

Medical Officers at Perambalur
medical officers-at-perambalur
Author
First Published Apr 20, 2017, 8:35 AM IST


பெரம்பலூர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ அலுவலர்கள் திரளாக பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடி போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரளாக கூடினர். திடிரென்று ஆட்சியர் அலுவலகம் முன்பு உட்கார்ந்து போராட்டம் நடத்தத் தொடங்கினர்.

இந்தப் போராட்டத்திற்கு மாநில மகளிரணி செயலாளர் மருத்துவர் அனுசியா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நேரு முன்னிலை வகித்தார்.

இந்தப் போராட்டத்தின்போது, 2017 - 18-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டு இடஒதுக்கீட்டில் உள்ள முதுகலை மருத்துவ பட்டப்படிப்பிற்கான இடங்களுக்கு இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தொகுப்பிதழில் குறிப்பிட்ட விதிகளின்படி கலந்தாய்வு நடத்த வேண்டும்.

2018 - 19-ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை மருத்துவ பட்டப்படிப்பிற்கான தேர்வை தமிழக அரசே நடத்த வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தப் போராட்டத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை முழக்கங்களாக எழுப்பினர். 

Follow Us:
Download App:
  • android
  • ios