சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனுக்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.கே.விஸ்வநாதன், கடந்த மே மாதம் சென்னை பெருநகர காவல் துறையின் புதிய ஆணையராக பொறுப்பேற்றார்.

ஆணையராக பதவியேற்றவுடன், பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் சென்னை, போலீசாரின் செயல்பாடுகள் இருக்கும் என்று கூறியிருந்தார்.

சமூக சேவைகளில் ஆர்வம் காட்டிவரும் ஆணையர் விஸ்வநாதன், போரூர் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆயிரத்து இருநூறு பேர் கொண்ட குழுவுடன் இணைந்து சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டார்.

தற்போது, அவருக்கு சிறந்த சேவைக்காக குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையின்பேரில் இந்த பதக்கம் அவருக்கு வழங்கப்பட உள்ளது.

கூடுதல் ஆணையர் சேஷசாயி மற்றும் கூடுதல் எஸ்.பி. ராஜாவுக்கும் குடியரசு தலைவர் பதக்கம் வழங்குவதற்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.