மதிமுகவில் இருந்து மார்க்கோனி நீக்கப்பட்ட விவகாரம் - அக்கட்சி பொறுப்பாளர்கள் 28 பேர் திடீர் ராஜினாமா!

பொதுச்செயலாளர் வைகோவின் முடிவை கண்டித்து, மதிமுக பொறுப்பாளர்கள் 28 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கூண்டோடு ராஜினாமா

MDMK Party Officials 28 members resigned from MDMK after Mayiladuthurai District Secretary removed

மதிமுக கட்சியில் இருந்து, அதன் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மார்க்கோனியை நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ. இந்நிலையில் பொதுச்செயலாளர் வைகோவின் முடிவை கண்டித்து, மதிமுக பொறுப்பாளர்கள் 28 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மார்க்கோனி, மதிமுகவின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் ஆக இருப்பவர், இவர் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் உட்பட பல்வேறு உயரிய பொறுப்புகளில் இருந்து, கட்சிக்காக கடுமையாக உழைத்து, படிப்படியாக முன்னேறி தற்போது மாவட்ட செயலாளராக உள்ளார்.

இதையும் படியுங்கள் : "இது திமுகவின் அதிநவீன விஞ்ஞான ஊழல்" - அண்ணாமலை 

இந்த சூழலில் தான் மார்க்கோனி, அதிமுக கவுன்சிலர்களின் உதவியுடன் தன் தாயை நகராட்சி தலைவராக திட்டமிட்டு இருப்பதாகவும். இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ரகசியமாக சந்தித்து அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வைகோ அவரை கட்சியிலிருந்து நீக்கினார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதனையடுத்து மார்கோனி நீக்கப்பட்டதை கண்டித்து மதிமுக கட்சியின் பொருளாளர்கள் 28 பேர் தற்போது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இது தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : மதிமுக மாவட்ட செயலாளரின் பதவி பறிப்புக்கு இதுதான் காரணமா? 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios