சென்னையில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை..! நள்ளிரவில் களத்தில் இறங்கி அதிரடி காட்டிய மேயர் பிரியா
வடகிழக்கு பருவமழை தொங்கியுள்ள நிலையில், சென்னையில் நேற்று இரவு முழுவதும் மழை கொட்டித்தீர்த்து. இதனையடுத்து தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியை தீவிரப்படுத்தும் வகையில் நள்ளிரவில் அதிகாரிகளுடன் களத்தில் இறங்கிய மேயர் பிரியா பல்வேறு இடங்களுக்குநேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் கொட்டி தீர்த்த மழை
வட கிழக்கு பருவமழையானது வழக்கத்தை விட சற்று தாமதமாக இந்த ஆண்டு தொடங்கினாலும் ஆரம்ப நாட்களிலேயே சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது. குறிப்பாக நேற்று காலை சென்னையில் மேகமூட்டத்தோடு அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. பின்னர் மாலை நேரத்தில் கொட்ட தொடங்கிய கனமழை இடி மின்னலுடன் விடிய விடிய பெய்தது. இதன் காரணமாக சென்னையில் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். நேற்று பெய்த ஒரே மழைக்கு சென்னை சாலைகள் பாதிக்கப்பட்டது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. குறிப்பாக எழும்பூர், தியாகராயநகர், ராயப்பேட்டை, பெரியமேடு போன்ற பகுதியில் தண்ணீர் தேங்கியது.
சென்னையில் நள்ளிரவில் மேயர் ஆய்வு
மழை நீர் வடிகால் பணிகள் சென்னை நகரில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தண்ணீர் தேங்கியது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடையவைத்தது. இதனையடுத்து சிறிது நேரத்தில் தண்ணீர் மழைநீரை் வடிகால் வாய்க்கால் மூலம் வெளியேற தொடங்கியது. சென்னை முழுவதும் கன மழை பெய்த நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று இரவு பெரியமேடு, ஜி.பி.ரோடு, அண்ணாசாலை, பூக்கடை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேங்கிய மழை நீரை உடனடியாக வெளியேற்றும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.மேலும் மற்ற பகுதியில் மழை நீர் தேங்கிய நிலவரங்களை வாக்கி டாக்கி மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிந்த அவர் தண்ணீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், சென்னையில் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. முதல்வரின் உத்தரவின் பேரில் போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பல இடங்களில் மழை நீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது.
நீரை வெளியேற்ற நடவடிக்கை
சில பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கும் நிலையில் அதனையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.கடந்த ஆண்டு இரண்டு அல்லது மூன்று நாட்கள் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், தற்போது ஒருமணி நேரத்தில் மழை நீர் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளோம் என்றார். ஒருவேளை மழை அதிகமானாலும் மழைநீர் வெளியேற்ற வடிகால்கள் சரியான முறையில் உதவி செய்யும் என கூறினார்.
இதையும் படியுங்கள்