சந்திரயான் - 2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக மங்கள்யான் திட்ட இயக்குனர் திரு. மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளா்.

ஈரோட்டில் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திரு. மயில்சாமி அண்ணாதுரை, பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்பாேது இதனைத் தொிவித்தாா். “இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய ரூ. 2,000 நோட்டில் மங்கள்யான் செயற்கைகோளின் புகைப்படம் பதிவு செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா். 

கர்நாடகாவில் நிலவு போன்ற மாதிரியை ஏற்படுத்தி அதில் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் தயார் செய்யப்பட்டுள்ள 6 சக்கர ரோபோவை மெதுவாக இறக்கி சோதனை செய்யும் முறைகள் குறித்தும், நிலவில் உள்ள கனிமவளங்களை ஆய்வு செய்வது குறித்தும் சோதனை நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முழுமை பெற்றவுடன் 2017 ம் ஆண்டு இறுதிக்குள் சந்திரயான்-2 நிலவுக்கு அனுப்பப்படும் என மங்கள்யான் திட்ட இயக்குனர் திரு. மயில்சாமி அண்ணாதுரை தொிவித்தாா்.