தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இதுக்குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்பசலனம் காரணமாக, இன்று வட உள் தமிழக மாவட்டங்கள், தேதி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

31.03.2022 முதல் 03.04.2022 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

அதிக பட்ச வெப்பநிலை:

30.03.2022 முதல் 01.04.2022 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.

சென்னையை பொருத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.