Marxist Communist Party protest and condemned active officer
விருதுநகர்
பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் விருதுநகரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ளது மம்சாபுரம். இந்த கிராமத்தில் புதிய குடிநீர் இணைப்பு பிரச்சனையில் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு மாரியப்பன், அங்கம்மாள், பெருமாள் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியச் செயலாளர் சசிக்குமார் முன்னிலையில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமுருகன் தொடங்கி வைத்து பேசினார்.
கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜோதிலட்சுமி, திருமலை, திருவில்லிபுத்தூர் நகர செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
இந்த காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
