marxist Communist Party of India condemned Protest in nagai
நாகப்பட்டினம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சி சார்பில் நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்கேரி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் சுரேஷ், கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று நாகப்பட்டினம் புதியப் பேருந்து நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் நாகப்பட்டினம் மாலி தலைமை வகித்தார்.
இதில், அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.வி.முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்று கிளைச் செயலாளர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
