marxist communist party held in protest
கன்னியாகுமரி
ரேசன் சர்க்கரை விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், திருநந்திக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேசன் கடை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குலசேகரம் வட்டாரக் குழு உறுப்பினர் தங்கையன் தலைமை வகித்தார்.
கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுரேஷ்குமார் போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார். வட்டாரச் செயலர் விசுவம்பரன், வட்டாரக் குழு உறுப்பினர் ஜெனித், கிளைச் செயலர் நாணுக்குட்டன், மாவட்டக் குழு உறுப்பினர் ஸ்டான்தாஸ் உள்ளிட்டோர் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ரேசன் சர்க்கரை விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
மாவட்டக் குழு உறுப்பினர் ரெஜீஷ்குமார் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.
