பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்தார்.

விளையாட்டுத்து துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், விருது வழங்கி கௌரவித்தார்.

சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. 

இந்த ஆண்டுக்கான விருதுகள் பட்டியலை, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

டெல்லி, குடியரசு தலைவர் மாளிகையில், விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், துரோணாச்சாரியா மற்றும் தயான்சந்த் விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

அண்மையில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றார். அவருக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்தார். மேலும் ரூ. 5 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. இது
மட்டுமல்லாது 17 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.