Marina beach sinking in rainwater
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக, கடற்கரை முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கடல் நீர், மழைநீர்
எதுவென்று தெரியாத நிலை காணப்படுகிறது.

கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று மாலை தொடர்ந்து சுமார் 5 மணி நேரம் பெய்த கன மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.
நேற்று சென்னையில் மட்டும் 30 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று பெய்த கனமழை காரணமாக சென்னை மெரீனா கடற்கரை மணற்பரப்பில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், கடல்நீர், மழைநீர்
எதுவென்று தெரியாத நிலை காணப்படுகிறது.
