Asianet News TamilAsianet News Tamil

மார்ச் - 23 ஆம் தேதி உயர்நிலைக் கூட்டம் - விவசாயி பிரச்சனைக்கு விடை கொடுக்க தயார்?

March - 23 in the high-level meeting - the farmer prepared to give an answer to the problem?
march --23-in-the-high-level-meeting---the-farmer-prepa
Author
First Published Mar 20, 2017, 7:06 PM IST


தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் குறித்து மார்ச் 23 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் உயர்நிலை கூட்டம் நடைபெற உள்ளது.

விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர்மந்திர் பகுதியில்  தமிழக விவசாயிகள் நடத்தி வரும் அரைநிர்வாண போராட்டம், ஏழாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இடுப்பில் இலை தழைகளை கட்டிக்கொண்டும், மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு, நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாராளுமன்ற துணைசபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க. எம்பிக்கள் மத்திய நிதி அமைச்சரையும், நீர்பாசன அமைச்சரையும் சந்திக்க வைப்பதாக உறுதி அளித்தனர்.  

மேலும் விவசாயிகள் மேற்கொண்டுள்ள 7 நாள் போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டு கொண்டனர். ஆனால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதைதொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் குறித்து மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன் சிங் உள்துறை அமைச்சகத்திற்கும் நிதித்துறைக்கும் உயர்மட்ட குழுவை கூட்டகோரி கடிதம் எழுதினார்.

இந்நிலையில், அதன் அதிரடி நடவடிக்கையாக வரும் 23 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் உயர்நிலை கூட்டம் நடைபெற உள்ளது.  

இதில் தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் குறித்து முடிவு அறிவிக்கப்படும்  என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராதாமோகன் சிங் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios