விழுப்புரம்
அதிமுகவின் நம்பிக்கை நாயகன் ஒபிஎஸ் என பேனர் ஒட்டி சசிகலாவை எதிர்க்கும் ஒபிஎஸ்க்கு மக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, தீபா பேரவை என அதிமுக மூன்று அணிகளாக பிரிந்து விட்டது. அதில், ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஒபிஎஸ் முதல்வரானார். சசிகலா அதிமுக கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளரானார். அதன்பிறகு ஆட்சியும், கட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்ற நோக்கில் சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா நியமிக்கப்பட்டார்.
பின்னர் ஒபிஎஸ்ஸை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தது சசிகலா கும்பல். அதுவரை சின்னம்மா என்று பாராட்டியவர், ஒரு கட்டத்தில் சசிகலாவின் வண்டவாளங்களை புட்டு புட்டு வைக்க ஆரம்பித்தார்.
ஜெயலலிதா ஒருவருக்கே என் முதுகு வளையும் என்று கூறி, நெஞ்சை நிமித்தினார். இதன் தாக்கம், அதிமுகவில் சசிகலாவின் அராஜகத்தை எதிர்க்க நினைத்தர்களும் ஒபிஎஸ்ஸுடன் இணைந்து கைகோர்த்தனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மட்டுமனின்றி மக்களும் ஓபிஎஸ்ஸை ஆதரித்து பேனர் வைத்தனர்.
அதைபோல சின்னசேலத்தில் சசிகலா பேனரை இறக்கியும், ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக பல இடங்களில் பேனர் வைத்தனர்.
அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் நம்பிக்கை நாயகன் ஓபிஎஸ் என முழக்கமிட்டு, பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
கல்வராயன்மலையிலும் பரவலாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இரகசிய கூட்டம் நடத்தி வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் சின்னசேலத்தில் முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் தலைமையில், ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய ஜெ பேரவையினர் என பெரிய பட்டாளமே ஓபிஎஸ்ஸை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.
சின்னசேலம், கச்சிராயபாளையம் பகுதிக்கு உட்பட்ட கச்சிராயபாளையம், மாத்தூர் உள்ளிட்ட இடங்களில் தீபா பேரவை உதயமான நிலையில் தற்போது ஓபிஎஸ் அணியும் பலமாக உருவாவதால் சசிகலா ஆதரவாளர்கள் சோகத்தில் உள்ளனர்.
மேலும், ஜெ,தீபா மற்றும் ஒபிஎஸ் இருவரும் ஒரு அணியில் இருந்து ஜெயலலிதாவின் வழிக்காட்டுதலில் அதிமுகவை நடத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
