Asianet News TamilAsianet News Tamil

Avian milk : பதற்றமடைந்து தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்- மனோ தங்கராஜ்

புயல் பாதிப்பால் மக்கள் பதற்றமடைந்து தேவையை விட அதிகமான பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். 
 

Mano Thangaraj requested that the public should not buy too much milk and stock up KAK
Author
First Published Dec 6, 2023, 8:51 AM IST

புயல் பாதிப்பால் மக்கள் அவதி

வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டி போட்டது. இதனால் வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. சுமார் 4 முதல் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வரமுடியாத நிலை உருவானது. மேலும் மின்சாரம், மொபைல் டவர் கட் ஆனதால் வெளி உலக தொடர்பு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

மேலும் மக்களுக்கான அத்தியாவசிய தேவையான தண்ணீர், பால், உணவு கிடைக்காமல் சிரமம் அடைந்தனர். மேலும் நேற்று முழுவதும் பால் சேவை தடைபட்டது. இதனை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருந்த போதும் பல இடங்களில் பால் விநியோகம் கிடைக்காத நிலை உருவானது. 

 

பால் இருப்பு வைக்காதீங்க

ஆவின் பால் தட்டுப்பாடு  தொடர்பாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டு பதிவில், ஆவின் நிறுவனம் வழக்கமாக சென்னையில் விநியோகிக்கும் 15 லட்சம் லிட்டர் பாலை கடும் மழை புயலை பொருட்படுத்தாமல் விநியோகம் செய்துள்ளது. இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதி ஆவின் பால் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொண்டேன். நிலமை நன்கு சீரடைந்து வருகிறது, வாடிக்கையாளர்கள் பதற்றமடைந்து அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்;

அம்பத்தூர் பண்ணையில் வெள்ளம் வடிந்து சீரடையாத காரணத்தால், அங்கிருந்து விநியோகிக்கப்படும் பகுதிகளில் சிறிது காலதாமதம் ஏற்படலாம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேளச்சேரி பகுதிக்கு வழக்கமான விநியோகத்தை விட கூடுதலாக 10,000 லிட்டர் பால் மாண்புமிகு அமைச்சர் எ.வ வேலு அவர்களின் ஏற்பாட்டில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios