இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி மாணவரின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டு, பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. 

வாகனச் சோதனையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக நீர்க்கோழியேந்தலைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கல்லூரி மாணவரை, கீழத்தூவல் காவல்நிலைய காவலர்கள் அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் வீடு திரும்பிய மணிகண்டன் திடீரென உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கு காவல்துறையினரே காரணம் எனக் கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, உடலை வாங்கவும் மறுத்துவிட்டனர். அதே நேரம் மாணவரை தாக்கவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்து, சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டது. எனினும் உடலை வாங்க மறுத்து பெற்றோரும், ஊர் மக்களும் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்பேரில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மறு உடற்கூராய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மணிகண்டன் தரப்பில் இருந்து ஒரு மருத்துவர் செல்ல வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியதால், மறுஉடற்கூராய்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.இறுதியில் இதற்கு காவல்துறையினர் அனுமதி அளித்ததால், நீதிமன்ற உத்தரவுப்படி வீடியோ பதிவுடன் உடற்கூராய்வு நடத்தப்பட்டது.

பின்னர் உடலை ஒப்படைக்க காவல்துறையினர் முன் வந்தபோது, ஆய்வு முடிவுகள் வந்தபிறகே பெற்றுக் கொள்வோம் என மீண்டும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து, அங்கு வந்த உயரதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி, உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்க பலத்த பாதுகாப்புடன் உடல் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்பேரில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மறு உடற்கூராய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மணிகண்டன் தரப்பில் இருந்து ஒரு மருத்துவர் செல்ல வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியதால், மறுஉடற்கூராய்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.இறுதியில் இதற்கு காவல்துறையினர் அனுமதி அளித்ததால், நீதிமன்ற உத்தரவுப்படி வீடியோ பதிவுடன் உடற்கூராய்வு நடத்தப்பட்டது.

மேலும் காவல் நிலைய விசாரணைக்கு பின்னர், போலீசார் கையெழுத்து வாங்கி கொண்டு காவல் நிலையத்தில் இருந்து மணிகண்டனை ஆட்டோவில் வீட்டிற்கு அழைத்து சென்றோம். வீட்டிற்கு வந்த பிறகு போலீசார் இரும்புக் கம்பியால முதுகு, வயிறு, மர்ம உறுப்பில் அடிச்சதையும் கூறி தாயிடம் கதறி அழுதுள்ளார். இரவு நேரம் என்பதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாததால் காலையில் அழைத்து செல்லலாம் என்பதாலல் ஆறுதல் கூறி வைத்தோம். திடீரென நள்ளிரவில் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார் என அவரது உறவினர்கள் கண்ணீர் கூறியுள்ளனர்.