Mancuvirat virattalumpu available even for the winners got the wounded pride speech

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த இளவட்ட மஞ்சுவிரட்டில் 11 பேர் காயமடைந்தனர். வெற்றிப் பெற்றவருக்கு கூட இந்த வீரத்தழும்பு கிடைத்திருக்காது என்று காயம் பட்டவர்கள் பெருமிதத்தோடு பேசிக் கொண்டனர்.

உச்சநீதிமன்ற போட்ட தடையால் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இளவட்ட மஞ்சுவிரட்டு, சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் ஐய்யனார் கோயில் வளாகத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்த இளவட்ட மஞ்சுவிரட்டில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தன.

மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

சீறிப்பாயந்த கொம்பு வைத்த சிங்கங்களை, காளையர்கள் கட்டித் தழுவி அடக்க முற்பட்ட்டனர். சிலர் அடக்கினர், சிலர் அடங்கினர்.

மஞ்சுவிரட்டில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் கிராமத்தின் சார்பில் வேட்டித் துண்டுகள் வழங்கப்பட்டன.

மஞ்சுவிரட்டில் பங்கேற்ற மாடுகள் முட்டியதில் 11 பேர் காயம் அடைந்து வீரத் தழும்பைப் பெற்றனர். வெற்றிப் பெற்றவருக்கு கூட இந்த கௌரவம் கிடைக்காது என்று குத்துப் பட்டவர்கள் பேசிக் கொண்டனர்.

மஞ்சுவிரட்டைக் காண ஏராளமானோர் கூடியிருந்தனர். இதனால், பலத்த காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மஞ்சுவிரட்டிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து அசத்தி இருந்தனர்.