வயிற்றுக்குள் பெரிய கற்குவியல்கள் போல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு அவருக்கு இனிமா கொடுத்ததில், அவர் வயிற்றுக்குள் இருந்து கற்கள் எல்லாம் வெளியே வந்துள்ளது. 

இலங்கையின் கொழும்பிலிருந்து சென்னை விமானநிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருள் வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. சனிக்கிழமை வந்த இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் விமானநிலைய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். 

அதில் சுற்றுலா பயணிகள் விசாவில் வந்திருந்த இலங்கையைச் சேர்ந்த நைமுதீன் என்ற பயணிடமும் விசாரித்ததில் அவருக்கு முன்னுக்கு பின் முரணாக பதலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதித்துள்ளனர். ஆனால் அப்போது எதுவும் சிக்கவில்லை என்பதால் சென்னை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்துள்ளனர். 

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் விவகாரம்.. முழு பொறுப்பும் தலைமையாசிரியர் தான்.. பள்ளிக்கல்வித்துறை பரபர..

அப்போது, அவர் வயிற்றுக்குள் பெரிய கற்குவியல்கள் போல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு அவருக்கு இனிமா கொடுத்ததில், அவர் வயிற்றுக்குள் இருந்து கற்கள் எல்லாம் வெளியே வந்துள்ளது. இதனையடுத்து அந்த கற்களை ஆய்விற்கு உட்படுத்தியதில், அவை அனைத்தும் விலை உயர்ந்த முதல் தரமான ரத்தின கற்கள் என்பது தெரியவந்தன. மொத்தமாக அவரது வயிற்றிலிருந்து 1,746 ரத்தின கற்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து, நைமுதீனிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். நடத்திய விசாரணையில் கடத்தலுக்கு உடந்தையாக முக்கிய நபர்களின் விவரங்களை அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரத்தின கற்கள் கடத்தலில் சென்னையை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை அவர் அடையாளம் காட்டியுள்ளதாக தகல்கள் தெரிவிக்கின்றன. எனவே அவரிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க:திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை.. உறவினர்கள் சாலை மறியல்