சென்னை நகரில் மக்கள் தொகை அதிகரித்து வருவது போலவே போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழக அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது.

இதேபோல் ஐடி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளில் வெடிகுண்டு இருப்பதாக அடிக்கடி மர்மநபர்கள் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து வருவதும், அவர்களை போலீசார் கைது செய்வதும் தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில்,இன்று காலை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர்,  சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணகர்கள்,மோப்ப நாயுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். ஆனால், அங்கு வெடிகுண்டு சிக்கவில்லை. இதனால், வதந்தி என தெரியவந்தது.

இதற்கிடையில், சைபர் கிரைம் போலீசார், கட்டுப்பாட்டு அறைக்கு வந்த எண்ணை வைத்து விசாரித்தனர். அதில், சென்னை செனாய் நகரை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர், போன் மூலம் தகறான தகவலை பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.