Male peacock recovered with a wound Four days later the forest returned after the treatment ...

ஈரோடு

ஈரோட்டில், காட்டுப் பகுதியில் காலில் காயத்துடன் மீட்கப்பட்ட ஆண் மயில் நான்கு நாள்கள் கொடுக்கப்பட்ட சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானி சாகர் வனச் சரகத்திற்கு உள்பட்து விலாமுண்டி. இந்த பகுதியில் வனத் துறையினர் கடந்த திங்கள்கிழமை சுற்றுப் பணியில் இருந்தனர்.

அப்போது, ஒன்றரை வயதுமிக்க ஆண் மயில் ஒன்று வலது காலில் அடிபட்டு உயிருக்குப் போராடிய நிலையில் தவித்துக் கொண்டிருந்தது.

அதனைக் கண்ட வனத்துறையினர் அந்த மயிலை மீட்டனர். பின்னர், சிகிச்சைக்காக சத்தியமங்கலம் வன கால்நடை மருத்துவமனைக்குக்கொண்டுச் சென்றனர்.

அங்கு வன கால்நடை மருத்துவ அலுவலர் கே.அசோகன் நான்கு நாள்களாக அந்த மயிலுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

நான்கு நாள்கள் சிகிச்சைக்குப் பின் காயம் குணமடைந்த அந்த ஆண் மயிலை பவானி சாகர் வனப் பகுதியில் நேற்று வனத் துறையினர் பாதுகாப்பாக கொண்டுபோஉ விட்டனர்.