பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஸ்ரீ  தேவி  இறந்ததை தொடர்ந்து அவருடைய  உடல்  இன்று துபாயிலிருந்து மும்பை கொண்டு வரப் படுகிறது.

நடிகை ஸ்ரீ தேவி குளியலறை தொட்டியில் உள்ள நீரில் தவறுதலாக விழுந்து  மூழ்கியதில் உயிரிழந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது

உடற் கூராய்வு மற்றும்  தடயவியல் துறை அறிக்கையில் இந்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே, மாரடைப்பு காரணமாக தான் உயிரிழந்துள்ளதாக  காரணம்  கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினமே, இது குறித்து தடவியல் மருத்துவர்கள் ஆய்வு செய்ய தொடங்கினர்.

இந்நிலையில், அவருடைய உடல் இந்தியா கொண்டுவரும் வேலையில், மும்முரமாக  மற்ற வேலைகள் நடைபெற்று வந்தது.

மேலும், நடிகை நடிகர்கள் ஸ்ரீ தேவியின்  இறுதி சடங்கில் பங்கு பெற மும்பைக்கு  கிளம்ப தொடங்கி உள்ளனர். இந்நிலையில், ஸ்ரீ தேவியின் உடல் மும்பை கொண்டுவர  மேலும் தாமதம் ஆனது. 

இதனை தொடந்து ஸ்ரீ தேவி, குளியலறை தொட்டியில்,உள்ள நீரில் தவறுதலாக  விழுந்ததால் தான்  மரணம் அடைந்துள்ளார் என புதிய தகவலை, தடவியல்  மருத்துவர்கள் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, இதன் மூலம்  ஸ்ரீ தேவி  மரணத்தில் புது சர்ச்சை  கிளம்பியுள்ளதால், உடலை  இந்தியா கொண்டு வர தாமதம் ஆகும் என  என கூறப்படுகிறது