கன்னியாகுமரி

கையில் தட்டு ஏந்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 7-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா குழுவின் சாதகமான பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும்

ஊதியக்குழுவில் மாற்றம் வேண்டும்

பணிச்சுமையை குறைக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய கிராமிய அஞ்சல்ஊழியர் சங்கத்தினார் கடந்த 16–ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கி 7-வது நாளாக தொடர்ந்து வருகிறது.

இந்தப் போராட்டத்தில் நாள்தோறும் விதவிதமான போராட்ட வடிவத்தை கையில் எடுக்கின்றனர்.

வாயில் துணிக் கட்டுதல், கண்களை துணியால் கட்டுதல், பிச்சை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் தலைமை அஞ்சல்நிலைய அலுவலக வளாகத்தில் நடக்கும் இந்தப் போராட்டத்தில் கிராமிய அஞ்சல்ஊழியர்கள் 7-வது நாளான நேற்று கையில் தட்டு ஏந்தி போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்திற்கு சங்கத் தலைவர் சுகுமாரன் தலைமை வகித்தார். இதில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.